சதுரங்கம் (Chadurangam)

As of now nan Trichy vaasi.

Tamilnadu konjam soodana oor nu sonna trichy adhile innum konjam soodana idam nu dairyama sollalam.

So after dinner majority of trichyites pola nanum mottai maadile oru arai mani neramavathu kathu vangira peyaraala

a)megathai kannaaleye thurathradhu,

b)nilaavukkulle simran moonji teriyudhaanu tedrathu,

c)stars ellam adhu adhu idathule seriya irukka nnu ennuradhu ,

d)pakkathu/edhir veetu mottai maadile yar irukka nu parkave parkaame irukradhu :-)

ipdi oru routine  set of activities vechruppen.

At a point of time,idhile one or more than one activities seyya vidatha alavu namma national insect (adhaanga kosu) ennai aagramichudum. Appo ellathukum(excluding activity d..athu nan seyyadhadhu..mind u) good nite sollitu nallapillai a keezhe irangi poiduven.

One of these days, yaro enkiite pesina madhiri oru bramai irundirukku nu ninekren…have tried to pen it as u see below…..prose+poetry kalandhu than irukkum…purists mannichidunga…

சதுரங்கம்

———-

கதிர்  சாய்ந்த  மாலை  வேளை …

உணவுக்குப்பின்  ஓய்வாக
மொட்டை  மாடி  தரையில்
சற்றே  மல்லாந்த  நேரம் ….
மேலே  பார்த்தால்  தெரிந்த  முகம் ….

…வான்  மகள் ….

மெலிதாய்  ஒரு  நகை …
குறும்பாய்  ஒரு  கண்  சிமிட்டல் ….

ஏதோ  விளையாட  அழைக்கிறாள்
என  புரிந்தது ….
என்ன  விளையாட்டு ?

யோசிக்கும்  முன்
எதிரே  துள்ளி  விழுந்தது
ஒரு  கட்டமிட்ட  பலகை

ஒ ……இன்று  சதுரங்கம்  !!

அவசரமாய்  காய்களை  தேடினேன்
ஞாபக  பைய்யுள்
தேடி துழாவியதில்
எண்ண விரல்களில்
முதலில்  சிக்கியது … புன்னகை 🙂

புன்னகையுடன்  புன்னைகையை
பலகை  மேல்  நான்  வைக்க ….
பதிலுக்கு  எதிர்புறம்
அழகாய்  சிரித்து
எழுந்தது வைகறை …

சற்றே  சஞ்சலத்துடன்
நான்  காய்  நகர்த்த …
பதிலுக்கு ஒரு கருமுகில்  கூட்டம்
வேகமாய்  நகர்ந்து
என்  பக்கம்  வந்தது…

கோபத்தை  கோபமாய்
பலகை  மேல்  நான்  நகர்த்த ….
எதிரே  ஒரு  மூலையில்
பலமாய்  இடி  முழக்கம் ….

சுட்டு  விழி  பார்வையையே
அடுத்த  காயாய்  நான் எடுக்க ….
கீழ்வானை  கீறியது
கண்  கூசும்  மின்னல்  ஒன்று

கண்ணீர்  எடுத்து  நான்
பலகை  மேல்  வைக்கும்  முன்னே …
எதிர்புறம்  சோவென
பெய்தது  அடை மழை …

என்னவளின் ஊடலை
காயாக  நான் வைக்க ….
பதிலுக்கு  பலகை  மேல்
பிழம்பாய்  செங்கதிர் ….

ஆசையாய்  காதலுடன்
அடுத்த  காயை  நான்  நகர்த்த ….
வட்டமிட்டு  குளிர்  பொழிந்தது
நீல  வானின்  வெள்ளை  நிலா ….

வண்ண  வண்ண  கனவுகளை
அள்ளி  நான்  எடுத்து  வைக்க ….
எதிரே  வான்  முழுதும்
பொட்டுக்களாய்  விண்மீன்  கூட்டம் ….

எண்ணத்தை  வரிகளில்  கோர்த்து
அழகிய  கவிதை  புனைந்து
பாங்காய்  பலகை  மேல்  வைக்க …..
எதிரே  முகில்  கூட்டம்  விலக்கி
எழுந்தது  எழு  வண்ண வானவில் ….

அடுத்த  காயை  தேடி  தோல்வியுற்று
தளர்வாய்  எழுந்தேன்
பலகை  முன்னிருந்து …
‘விட்டுவிடு  என்னை …உனை  ஜெயிக்க
என்னால்  ஆகாது’….

மறுபடி  மெலிதாய்  ஒரு  நகை …
குறும்பு  கண்  சிமிட்டல்  வேறு ….
‘ஏதேனும்  இருக்கும் …
இறுதி  முயற்சி  தான்  செய்து  பாரேன் ….’

ஏதேனும்  காய்கள்  தாம்  எஞ்சி  உள்ளவோ ?
மறுபடி  ஞாபக  துழாவல் …

அகப்பட்டது  ஒரு  காய் !
தப்பிக்க   இயலாது போல…

மறைந்திருந்த  காய்  தான்  ஏதோ  ?
தெரிந்து  கொள்ளும்  ஆவலில்
அதனை  நான்  வெளியெடுக்க ….

பார்வை  பிடிபடு  முன்னரே
வேகமாய்  கவிந்து
கண்ணை  மறைத்தது
காரிருள்

ஒ …துயில் ….:-)

——–

In English script (for those who find it difficult to read tamil script)

kadhir saayndha maalai velai…

unavukku pin ilaippara enni
mottai maadi tharai il
satre mallaandha neram….

Mele parthaal terindha mugam….

…vaan magal….

melidhaai oru nagai…
kurumbaai oru kan chimittal….

edho vilayada azhaikkiral
ena purindhadhu….
enna vilayattu?

yosikkum mun
edhire thulli vizhundhadhu
oru kattamitta palagai

oh……indru chadurangam !!

Avasaramaai kaaygalai thedinen
nyaapaga payyul
thedi thuzhaaviyadhil
enna viralgalil
mudhalil sikkiyadhu… punnagai

punnagaiyudan punnaigaiyai
palagai mel naan vaikka….
badhilukku edhirpuram
azhagaai sirithu
ezhundhadhu vaigarai…

Satre sanjalam soozha
naan kai nagartha…
bahhilukku oru karumugil kootam
vegamaai nagarndhu
vandhathu en pakkamaai …

Kobathai Kobammaai
palagai mel naan nagartha….
Edhire oru moolayil
balamaai idi muzhakkam….

Suttu vizhi parvayaye
adutha kaayaai naan edukka….
keezhvaanai keeriyadhu
kan koosum minnal ondru

Kanneer eduthu naan
palagai mel vaikkum munne…
Edhirpuram cho vena
peydhadhu adai mazhai…

Ennaval en mel konda oodalai
nan palagai mel eduthu vaikka….
badhilukku palagai mel
pizhambaai senkathir…

aasayaai kaadhaludan
adutha kaayai naan nagartha….
vattamittu kulir pozhindhadhu
neela vaanin vellai nila….

Vanna vanna kanavugalai
alli naan eduthu vaikka….
edhire vaan muzhudhum
pottukkalaai vin meen kootam….

ennathai Varigalil korthu
azhgiya kavidhai punaindhu
paangaai palagai mel vaikka…..
edhire mugil kootam vilakki
ezhundhathu ezhu vanna vaanavil….

adutha kaayai thedi tholviyutru
thalarvaai ezhundhen
palagai mun irunthu…
‘vittuvidu ennai…unai jeyikka
ennaal aagathu’….

marupadi melidhaai oru nagai…
kurumbu kan chimittal veru….
‘Edhenum irukkum…
irudhi muyarchi thaan seidhu paren….’

Edhenum kaaygal thaam enji ullavo?
marupadi nyapaga thuzhaaval…

agappattadhu oru kaai!
thapikka iyaladhu pola…

maraindhirundhadhu kaai thaan edho ?
terindhu kollum aavalil
adhanai naan veliyedukka….

parvai pidipadu
munnare vegamaai
kavindhu kannai
maraithadhu kaarirul

oh…thuyil….:-)

Advertisements

12 responses to “சதுரங்கம் (Chadurangam)

  1. வணக்காம்,
    வில்லிபுத்தூர் பதிவுக்ககு வந்து பின்னூட்டியதற்கு நன்றி.
    அங்கேஎயிருந்து இங்கே வந்தால் அததனை அழகான கவிதை.!!
    எல்லாம் கலந்து கதம்ப உணர்வுகள்.
    அருமை அருமை.
    நாங்களும் திருச்சியீல் இருந்திருக்கிறோம்…ஒரு மொட்டை மாடியும் இருந்தது:))
    கவிதை எழுதும் வயது கூட:)
    22 வருடங்கள் கடந்த நினைவு.
    விட்டுவிட்டேனோ:))))

  2. valaikkulmazhai

    நன்றி ரேவதி…கவிதைக்கு வயது கூட உண்டா? எதையும் விட்டுடலைன்னு நான் நினைக்கிறேன் .

    கார்த்தி

  3. வலைக்குள் மழை-க்கு வந்தேன். நனைந்துதான் விட்டேன். 🙂 உங்கள் சதுரங்க விளையாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து விளையாடுங்கள். உங்கள் கருத்துக்களை என் தளத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி. என்னுடைய மொட்டை மாடி விளையாட்டை இன்று பதிவு செய்துள்ளேன். இயன்றால் உங்கள் கருத்துக்களை அனுப்பவும். நன்றி.

  4. நன்றி கார்த்திகா …அப்போ மொட்டை மாடி உங்களையும் தான் பதம் பார்த்திருக்கு

    கார்த்தி

  5. கார்த்தி, உங்கள் சதுரங்கம் கவிதை அருமையிலும் அருமை. ரொம்பவெ ரசித்தேன்.
    கவிதை எழுதுபவர்களைக் கண்டால் எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கும். நீங்களும் நான் பொறாமை படுபவர்களின் லிஸ்டில் சேர்ந்து விட்டீர்கள்.

  6. good.. அதுவும் இந்த கேட்டகிரி ஆயிர ம் பொற்காசு அருமை

  7. உங்க வலைப்பக்கம் நல்லாயிருக்குங்க கார்த்தி. அழகான புகைப்படங்கள் அதைவிட அழகான கவிதைகள், உங்களை பத்தின்னு எல்லா இடத்திலுயும் அசத்தறீங்க.

    மொட்டை மாடியில் படுத்துட்டு வானத்தோட கதை பேசினதை எல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க

  8. என்னாங்க தரணி கொங்கு தமிழ்ல்லே கொல்ரீங்க ங்க….

    நம்ம ஊர்கார அம்மிணி நம்மளை மனுசரா மதிச்சு ரெண்டு எழுதிருக்குதுங்கோவ்வ்

    Jokes apart thank you very much thaarani

    கார்த்தி

  9. எக்கோவ் ஆயிரம் பொற்காசு தர தான் ஆளில்லே…எழுதியாவது பார்த்துக்கலாம் அப்டின்னு ஒரு சின்ன சின்ன ஆசை தான் ….
    மிக்க நன்றி முத்துலெட்சுமி ….தொடர்ந்து உங்க நல்லாதரவு இந்த கத்துக்குட்டி புலவனுக்கு வேணும்னு கேட்டுக்கற …..

    கார்த்தி

  10. நன்றி விஜய் …என்னை பார்த்து பொறாமை லாம் வேணாம் பா …..நான் கிறுக்கினதை கவிதைனு ஒத்துகிட்டதுகே உங்களுக்கு ஐநூறு பொற்காசு தந்துடறேன் ..(.நிஜம்மா சொல்றேன் …..மண்டபத்திலே யாரோ எழுதினதை வாங்கிட்டு வந்த போட்டா மாதிரியே எல்லாரும் பார்கறாங்க பா …)

    கார்த்தி

  11. Ithai padithu ennul ezhundha silirpai
    naan eduthu vaika-
    badhilaai palaigaiyil thalati vandhadhu
    thendral..

  12. :)) Another ultimate kavithai with an excellent ending…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s